நாகசைத்தன்யா மற்றும் சமந்தாவும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பான ‘யே மாய சேசாவே’ படத்தின் இணைந்து நடித்ததில் இருந்து இருவரும் காதலிக்கத் தொடங்கிவிட்டனர். இதையடுத்து, சமந்தாவுக்கும் நாகசைதன்யாவுக்கும் 2017ம் ஆண்டு கோவாவில் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.மேலும் சமந்தா திருமண புடவையை நாகசைதன்யா குடும்பத்திற்கே திருப்பி அனுப்பிவிட்டார்.
இதனால், நாகசைதன்யாவின் பெற்றோர்களான நாகார்ஜுன் மற்றும் அமலா நாகசைதன்யாவுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கு நாகசைதன்யா ஒகே சொல்லிவிட்டதாகவும், ஆனால், நடிகை வேண்டாம் என்று பெற்றோருக்கு கண்டிஷன் போட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் நாகசைதன்யாவின் திருமணம் குறித்து அவர்களுடைய குடும்பம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.