• Thu. Apr 16th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

மகளிர் அணி சார்பாக இஃப்தார் என்னும் நோன்பு திறக்கும் நிகழ்வு..,

ByS. SRIDHAR

Feb 28, 2026

புதுக்கோட்டை கோல்டன் நகர் VRA திருமண மஹாலில் இன்று மாலை நடைபெற்ற நிகழ்வில் SDPI கட்சி மகளிர் அணி சார்பாக இஃப்தார் என்னும் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது

9வது நாளான இன்று நிகழ்வில் ஏராளமான இஸ்லாமிய பெண்கள் மற்றும் இந்து பெண்கள் பங்கேற்று நோன்பு திறக்கும் நிகழ்வில் பங்கேற்றனர். SDPI கட்சியின் மாவட்ட மகளிர் அணி தலைவர் ரிஸ்வான பேகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் மகளிர் அணியின் மாநில செயலாளர் மற்றும் மண்டல தலைவர் மெஹராஜ் பானு புதுக்கோட்டை மேற்கு மாவட்ட SDPI கட்சியின் மாவட்ட தலைவர் ஸலாஹீதீன்

மாவட்டச் செயலாளர் முகமது சாதிக் சிறப்பு மற்றும் பொதுநல சித்த மருத்துவர் ஜசீமாபர்வீன் பல் மருத்துவர் ரயீஸாபர்வீன் உள்ளிட்ட இக்கட்சியை சேர்ந்த மகளிர் அணியினர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று நோன்பு திறக்கும் நிகழ்வில் பங்கேற்றனர். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் இன்று மாலை நடைபெற்ற நோன்பு திறக்கும் நிகழ்வில் பங்கேற்றனர்.