• Wed. Jun 3rd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்..,

ByS. SRIDHAR

Mar 1, 2026

புதுக்கோட்டை மாவட்டம் இரும்பாளி கிராமத்தில் பொதுமக்களுக்கும், விவசாய நிலங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் தனியார் கல் குவாரிக்கு அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கடந்த 27ஆம் தேதி குவாரி செயல்படுவதற்கு எதிராக அப்பகுதியை சேர்த்த செல்வகுமார் கேள்வி எழுப்பியதாக கூறப்பட்ட நிலையில், அவரை குவாரியின் உரிமையாளர் கரைக் கொண்டு மோதுவது போல் செயல்பட்டு, கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், அவர் தற்போது புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் கல்குவாரி உரிமையாளர் கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட கல்குவாரியை மூட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தற்போது புதுக்கோட்டை அருகே முத்துடையான் பட்டியில் திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டுள்ளனர் வருகின்றனர் இந்நிலையில் காவல்துறையினருக்கும் மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டு வருவதால் பரபரப்பு…

புதுக்கோட்டை

கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு வாக்குவாதம்