மாமன்னன் தான் நடிகராக எனது கடைசி திரைப்படமாக இருக்கும் இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என அமைச்சராகா பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் பேட்டி
தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பரிந்துரையை ஏற்று, இன்று காலை 9.30 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெற்ற விழாவில், உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் பேட்டி அளித்தார். “தமிழகத்தை விளையாட்டு தலைநகராக மாற்ற முயற்சிப்பேன். அமைச்சராக முடிந்தவரை சிறப்பாக செயல்படுவேன். மாமன்னன் தான் நடிகராக எனது கடைசி திரைப்படம். இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன். விமர்சனங்கள் வந்து கொண்டே தான் இருக்கும். வாரிசு அரசியல் என்ற விமர்சனத்தை தவிர்க்க முடியாது, செயல்பாடுகள் மூலமே பதிலளிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.