• Fri. Apr 26th, 2024

நான் அப்படி தான் பேசுவேன் வேணும்னா பாய்காட் பண்ணுங்க – அண்ணாமலை ஆவேசம்

நாகர்கோயிலில் செய்தியாளர் சந்திப்பின் போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆத்திரத்தோடு பேசியதால், அண்ணாமலைக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே நடைபெற்ற வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் என்று பாஜகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அந்த நிகழ்ச்சிக்குப் பின்பு செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது செய்தியாளர் ஒருவர் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தின் போது இனி ஒரு மீனவர்கள் இலங்கையில் கைது செய்யப்பட மாட்டார்கள் என்று வாக்குறுதி அளித்தார் அதன்பின்னர் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுவதும் துன்புறுத்தப்படும் நடைபெற்று வருகிறது தற்போது கூட தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டு உள்ளனர் இதற்கு மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கேட்ட போது திடீரென ஆவேசமடைந்த மாநிலத் தலைவர் அண்ணாமலை ஒரு தனிப்பட்ட தொலைக்காட்சியின் பெயரைச்சொல்லி கேள்விகள் இவ்வாறு கேட்டால் நான் பதில் சொல்ல முடியாது எனவும் உங்களுடைய கேள்விகளுக்கு நான் இப்படித்தான் பதில் கூற முடியும் என்றும் ஆவேசம் அடைந்தார். இதனால் நிருபர்களுக்கும் அவருக்கும் சிறு நேரம் சலசலப்பு ஏற்பட்டது இதனைத்தொடர்ந்து பேட்டியை முடித்துக் கொண்டு எழுந்தார் .

தொடர்ந்து கேள்வி எழுப்பியதால், சென்னையில் சன்டிவி நிருபர் கேட்ட கேள்வியால் நடந்த சம்பவத்தை தெரிவித்து சன்டிவி செய்தியாளரை விமர்சித்தார் அவர் குறிப்பிட்ட தொலைக்காட்சியின் செய்தியாளர் என நினைத்து, அண்ணாமலை ஆத்திரத்தோடு அவரிடம் பேசினார். இதனால், சம்பந்தப்பட்ட தொலைக்காட்சியின் செய்தியாளர் அண்ணாமலையிடம் வாக்குவாதத்தில் ஈடுபடவே, அண்ணாமலைக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் நடைபெற்றது. வாக்குவாதத்தின் இறுதியில், பயந்துகிட்டே எல்லாம் பிரஸ்மீட் கொடுக்க முடியாது உண்மையை மட்டும்தான் நான் பேசுவேன் வேனுமுனா பாய்காட் பண்ணுங்க தனது செய்திகளை பிரசுரிக்கவில்லையென்றால், குப்பையில் போடுமாறு கோபத்தோடு கூறினார். இதனால் செய்தியாளர் சந்திப்பில் சலசலப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *