• Sat. Oct 12th, 2024

“நான் நல்லாருக்கேன்” – விஜய்காந்த் ட்வீட்

By

Sep 5, 2021 ,

துபாயில் தங்கி சிகிச்சையை எடுத்து வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், தான் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்துக்கு உடல்நிலை பிரச்சனை காரணமாக சமீப காலமாக தீவிர அரசியலில் ஈடுபட முடியவில்லை. இதனால் கட்சியை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் தான் பார்த்து வருகிறார். இதனிடையே, விஜயகாந்தின் பிறந்த நாளன்று, சிகிச்சை பெறுவதற்காக விரைவில் வெளிநாடு செல்ல உள்ளதாக அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து, கடந்த திங்களன்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், சென்னை விமான நிலையத்தில் இருந்து சிகிச்சைக்காக துபாய் சென்றார். அவருடன் இளைய மகன் சண்முக பாண்டியனும் சென்றிருந்தார். இந்த நிலையில், துபாயில் தங்கி சிகிச்சையை எடுத்து வரும் விஜயகாந்த், நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில், நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த ‘சத்ரியன்’ திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம்’ என புகைப்படம் என்று தெரிவித்து, அந்த புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *