
வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. ஆரம்ப காலத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து வந்தவர் ஹீரோவான பிறகு தொடர்ந்து வித்தியாச வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து இருந்தார்! தமிழைத் தொடர்ந்து தெலுங்கில் உப்பனா என்ற படத்திலும் நெகடிவ் கலந்த கதாநாயகியின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய வசூலை வாரி குவித்தது.
இப்பொழுது பாலிவுட்டிலும் பல படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி சமீபத்தில் பேட்டி ஒன்றில் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் மனைவிக்குத் தெரியாமல் வீட்டை விட்டு ஓடிப்போய் நடித்த சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்துள்ளார்.
