சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து அப்பகுதியில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, செஞ்சை செக்கடி பகுதியில் கணவன், மனைவி இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கணவன் சுந்தர், மனைவி பானுமதி ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ஒரு கிலோ, 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.