

மனிதர்கள் வாழக்கூடிய இடங்கள் நிலவில் இருப்பதாத புதிய ஆய்வுதகவல்கள் கிடைத்துள்ளன. நிலவில் அதிக வெப்பம்,குளிர் இருக்கும் என்பதால் அங்கு மனிதர்கள் வாழ இயலாது என கூறப்பட்டது. இந்நிலையில் மனிதர்கள் உயிர் வாழக்கூடிய தட்பவெப்பம் கொண்ட குகைகள் நிலவில் இருப்பதாக நாசா தகவல் அளித்துள்ளது.கடந்த 2009 ம் ஆண்டு நாசா அனுப்பிய விண்கலம் ஒன்று நிலவில் குகைகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளது. இந்த விண்கலம் அனுப்பிய தகவலின்படி நிலவில் குகைகள் மனிதர்கள் வாழக்கூடிய 17 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.மேலும் கதிரிவீச்சு மற்றும் விண்துகள்கள் பாதிக்காத வகையில் அக்குகைகள் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வாங்க நாம நிலவுக்கு செல்லலாமா?
