• Wed. Dec 11th, 2024

“Search for Doctor App”.. இனி சுலபமாக தேடலாம்..

Byகாயத்ரி

Jul 29, 2022

இந்தியாவில் வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் மக்கள் இருந்த இடத்தில் இருந்தே அனைத்தும் கிடைக்கும் விதமாக தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்து வருகிறது.

அந்த வகையில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள மருத்துவர்கள் பற்றிய தகவலை தொலைபேசி செயலியின் மூலமாக தெரிந்து கொள்ளும் வகையில் புதிய செயலி ஒன்றை தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலிங் அறிமுகம் செய்துள்ளது.நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில் தான் இது போன்ற செயலில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி “search for doctor app” என்ற செயலின் மூலம் அஞ்சல் குறியீடு எண் வசிப்பிட பகுதியை வைத்து தேடினால் அந்த பகுதியில் உள்ள மருத்துவர்கள் பட்டியலை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.மேலும் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவர்கள் எந்தெந்த துறைகளில் வல்லுனர்கள் உள்ளிட்ட தகவல்களை எளிதில் தெரிந்து கொள்ள முடியும். இந்த செயலியில் 80 ஆயிரம் மருத்துவர்கள் இணைந்துள்ளனர்.இந்த செயலியின் மூலம் மக்கள் தகுதி வாய்ந்த மருத்துவர்கள் இடம் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலிங் தலைவர் கூறியுள்ளார்.