• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

தக்காளி விலை குறைவால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..!

Byவிஷா

Aug 17, 2023

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தக்காளி விலை உச்சத்தில் இருந்தது. தமிழ்நாட்டிலும் தக்காளி அதிக விலைக்கு விற்பனையானது. அதிகபட்சமாக ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரைக்கும் விற்பனையான நிலையில், சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை நேற்று ரூ.10 குறைந்து ஒரு கிலோ தக்காளி ரூ.40க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 17) தக்காளி கிலோவுக்கு ரூ.05 குறைந்து ரூ.35க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து வரத்து அதிகரித்து வருவதால் வரும் நாட்களில் தக்காளி விலை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தக்காளி விலை தொடர்ந்து குறைந்து வருவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.