நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கிழ்குந்தா தேர்வுநிலை பேரூராட்சியில் பணியாற்றி வரும் 16 தூய்மை பணியாளர்களை வருடா வருடம் தோறும் தனது சொந்த செலவில் பேரூராட்சி அலுவலகத்திற்கு நேரடியாக சென்று தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தியும் பரிசு பொருட்கள் வழங்கியும் தேநீர் மற்றும் மதிய உணவுடன் ஆட்டம் பாட்டம் என. கொண்டாடப்பட்டு வருகின்றனர்.
மஞ்சூர் பாக்கொரை பகுதியில் வசித்து வரும் சமூக ஆர்வலரும் உதகை ஐடிஐ அலுவலக ஊழியருமான ரவிக்குமார் தொடர்ந்து தூய்மை பணியாளர்களை மே தின தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தூய்மை பணியாளர்களின் சேவைகளை பாராட்டி அவர்களை தொடர்ந்து சேவைகள் ஆற்றிட ஊக்கப்படுத்தியும் வருகின்றார்.