ஈரோடு மாவட்டம் புதூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார்.தலைமைகாவலரான இவர் மொடக்குறிச்சி காவல்நிலையத்தில் பணி பார்த்து வருகிறார். இவரது மனைவி தீபிகா சிறு சேமிப்பு,ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் கொக்கராயன்பேட்டை பகுதியை சேர்ந்த பள்ளிபாளையம் திமுக ஒன்றிய துணை செயலாளர் ஜான்சன் . இவர் ,ஏலச்சீட்டில் கலந்து கொண்டு 1லட்சம் ரூபாய் சீட்டு எடுத்த நிலையில் மீதமுள்ள சீட்டு 30ஆயிரம் ரூபாய் தவணைத்தொகையை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
இதையடுத்து ஒரு கட்டத்தில் தீபிகாவின் கணவர் ஜான்சனிடம் சீட்டு பணத்தை கேட்டுள்ளார்.அ ப்போது இருவரிடையே வாக்குவாதம் நடந்துள்ளது ஜான்சன் தனது ஆதரவாளர்கள் 5 பேரை சேர்ந்துக் கொண்டு ஜெயக்குமார் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார் .இதில் தலையில் படுகாயமடைந்து ஜெயக்குமார், ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே காவலர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய 5 பேர் மீது பள்ளிபாளையம் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் ஜான்சன் உறவினரான பீரவின்சன்,வைத்தீஸ்வரன் மற்றும் மேலாளர் சீராஜ்தீன் ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவத்தில் தலைமறைவாக உள்ள ஜான்சனை பள்ளிபாளையம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர் . காவலர் மீது திமுக நிர்வாகி தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.