சென்னையில் பெண்களால் நடத்தப்படும் உணவகத்தில், தமிழக கர்நாடக மாநிலங்கள் இடையே சுமூக உறவு மேம்பட வலியுறுத்தி, ஒரே நேரத்தில் 100 அடி நீள மைசூர்பாகு செய்தது, சாதனை புத்தகங்களில் இடம் பெற்றுள்ளது.
இந்த உணவகத்தை நடத்திவரும் உமா மகேஷ்வரி, மேகதாது அணை உட்பட கர்நாடகம், தமிழகம் இடையே உள்ள பிரச்னைகள் முடிவுக்கு வந்து சுமூக உறவு ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, மைசூர் பகுதியைச் சேர்ந்த இனிப்பு வகையான மைசூர்பாகை செய்ததாகக் கூறினார். 400 கிலோ சக்கரை, 350 கிலோ கடலை மாவு, 300 லிட்டர் எண்ணெயைக் கொண்டு, 6 மணி நேரத்தில் தயாரிக்கப்பட்ட இந்த 100 அடி நீள மைசூர் பாகு, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட், ஆசியா புக் ஆப் ரெக்கார்டில் பதிவு செய்யப்பட்டு, சாதனைச் சான்றுகள் உடனடியாக வழங்கப்பட்டன.