• Sat. Jun 3rd, 2023

ஆண்டிபட்டியில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் மக்கள் மறுமலர்ச்சி தடம் சார்பில் வேர்களை விழுதுகளாக்குவோம் தலைப்பில் 11 மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் வ.முருகானந்தம் அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நாராயணமூர்த்தி, ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

முன்னதாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகேசன் அனைவரையும் வரவேற்றார்.மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறையைச் சார்ந்த அலுவலர்களும் அரசு ஆதிதிராவிடர் நல பள்ளி மற்றும் அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் தலைமை ஆசிரியர் நிக்சன் மற்றும் ஆசிரியர்களும் ஆசிரியைகளும் விடுதி காப்பாளர்களும் பங்கேற்றனர். 300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் .ஜெயச்சந்திரன் (எ) கண்ணன் தொகுத்து வழங்கினார். உத்வேக பேச்சாளர் மதி ,பயிற்சியாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். மாவட்ட தனி வட்டாட்சியர் அர்ஜுணன் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *