• Fri. Mar 29th, 2024

மதுரையில் பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் பகுப்பாய்வு குறித்த மாநாடு

Byp Kumar

Apr 21, 2023

மதுரையில் பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் – தரமுறைகள் பூர்த்தி செய்யாமை மற்றும் விளைவுகளின் பகுப்பாய்வு குறித்த ஒரு நாள் மாநாடு மதுரையில் நடைபெற்றது.

இந்திய தர நிர்ணய அமைவனம், மதுரை பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் உரிமதாரர்கள் மற்றும் தரக்கட்டுப்பாட்டு பணியாளர்களுக்கு தரமுறைகள் பூர்த்தி செய்யாமை மற்றும் விளைவுகளின் பகுப்பாய்வு குறித்த ஒரு நாள் மாநாட்டில்,
இந்திய தர நிர்ணயம் படி தொகுக்கப்பட்ட குடிநீருக்கான (பேக்கேஜ் செய்யப்பட்ட இயற்கை மினரல் வாட்டர் தவிர) இரசாயன மற்றும் நுண்ணுயிரியல் சோதனை தேவைகளில் ஏற்படும் தோல்விகளின் காரணங்களைப் புரிந்துகொள்வதற்கு, உற்பத்தியாளர்களால் எடுக்கப்பட வேண்டிய தணிப்பு நடவடிக்கைகள் குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கபட்டது. இந்த மாநாட்டில் தமிழகத்தின் பதினெட்டு மாவட்டங்களில் இருந்து உற்பத்தியாளர்கள் மற்றும் தரக்கட்டுப்பாட்டு பணியாளர்கள் உட்பட சுமார் 350 பேர் கலந்து கொண்டனர்.


இந்திய தர நிர்ணய அமைவனம், மதுரை கிளை அலுவலக இணை இயக்குனர் திருமதி. ஹேமலதா பி.பணிக்கர்,இந்திய தர நிர்ணய அமைவனம் மதுரை கிளையின் மூத்த இயக்குநரும் தலைவருமான S.D.தயானந்த்,தெற்கு மண்டல துணை இயக்குநர் ஜெனரல் திரு. யுஎஸ்பி யாதவ் மதுரை FSSAI நியமன அலுவலர் டாக்டர் ஜெயராம் பாண்டியன்,மதுரை கிளை அலுவலக இணை இயக்குனர் திருமதி. பிரேம் சஜானி பட்னாலா ,தெற்கு மண்டல அலுவலக ஆய்வுகூடத்தின் இணை இயக்குனர் திரு. முனி நாராயணன், மாநாட்டில்,சோதனை அளவுருக்கள்/மாதிரி தயாரித்தல், மாதிரி தோல்வி பகுப்பாய்வு முறைகள் பற்றியும், மாதிரிகளை பரிசோதித்தல், தயாரிப்பு கையேடு, குறிப்பிட்ட வழிகாட்டுதல்கள்; திருத்தங்கள் மற்றும் தொகுக்கப்பட்ட குடிநீருக்கான (OTPNMW)”லேபிள் ஒப்புதல்” குறித்த விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டது.
மேலும், ஆன்லைன் போர்ட்டல் மூலம் உரிமம் புதுப்பித்தல், சேர்த்தல், புதிய விண்ணப்பம் போன்றவற்றுக்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.மேலும், மாநாட்டில், உற்பத்தியாளர்கள் தரப்பிலிருந்து கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் உற்பத்தி செயல்பாட்டின் போது ஏற்படும் தோல்விகளில் குறிப்பாக ஈஸ்ட் மற்றும் மோல்ட் சரிசெய்ய உற்பத்தியாளரால் மேற்கொள்ளப்பட வேண்டிய தணிப்பு நடவடிக்கைகள் குறித்து தெற்கு மண்டல துணை இயக்குநர் ஜெனரல் யு.எஸ்.பி யாதவ் மற்றும் தலைவர் எஸ்.டி.தயானந்த் ஆகியோர் விளக்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *