நீலகிரி மாவட்டத்தில் ஹெத்தையம்மன் பண்டிகையை முன்னிட்டு நாளை (டிச 22) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஹெத்தையம்மன் கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் ஹெத்தையம்மன் திருவிழா கொண்டாட தடை விதிக்கப்பட்டது. படுகர் இன மக்களால் கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த விழாவிற்கு, மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அளிப்பது வழக்கம்.
![](https://arasiyaltoday.com/wp-content/uploads/2021/12/c8bb2bcd-bc70-441c-aad0-882716e96b13.jpg)
அதன்படி இந்த ஆண்டு வருகிற 22 ம் தேதி (நாளை) ஹெத்தையம்மன் பண்டிகை நடைபெறுகிறது. இதனையொட்டி அரசாணை படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் , பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் மட்டும் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக ஜனவரி 8ஆம் தேதி சனிக்கிழமை மாவட்டத்தில் பணி நாளாக அறிவித்து ஆட்சிய எஸ்.பி.அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.