• Sat. Apr 27th, 2024

காரைக்குடி நகராட்சி ஊழியர்கள் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை

காரைக்குடியில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையாக வீடு, வீடாக சென்று மருந்து அடித்து நகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை.

மழைக்காலங்களில் டெங்கு கொசு உற்பத்தியாகி பல உயிர்களை பறித்துள்ள துயரங்கள் நடந்தேறியுள்ள நிலையில்,டெங்கு கொசு உற்பத்தி பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மேலும்,டெங்கு கொசு உற்பத்தியாகும் சிரட்டை கொட்டாங்குச்சி, இருசக்கர வாகன டயர்கள் போன்று மழைநீர் தேங்கும் பொருள்களை பொதுமக்கள் அப்புறப்படுத்தி சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இதன் தொடர்ச்சியாக சிவகங்கை மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட நகராட்சி நிர்வாகத்தினருக்கு மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி உத்தரவிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில்,தோட்டம் முழுவதும் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இன்று காரைக்குடி நகர்புறங்களில் நகராட்சி ஊழியர்கள் வீடு, வீடாகச் சென்று கொசுமருந்து அடித்தும்,அறிவுரை கூறியும் நடவடிக்கை மேற்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *