• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

ரூ.1,200 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்

ByA.Tamilselvan

Oct 8, 2022

இந்தியா மற்றும் இலங்கையில் விற்பனை செய்ய கொண்டு வரப்பட்ட ரூ1200கோடி ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்திய கடற்படை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் கேரளா மாநிலம் கொச்சி கடற்பகுதியில் படகு மூலம் கடத்தப்பட்ட 200 கிலோ ஹெராயினை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு 1,200 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தயாரிக்கப்பட்ட இந்த ஹெராயின் பாகிஸ்தான் வழியாக ஈரான் நாட்டு படகில் ஏற்றப்பட்டு, இந்தியா மற்றும் இலங்கையில் விற்பனை செய்ய கொண்டு வரப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக ஈரான் நாட்டைச் சேர்ந்த ஆறுபேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை மூத்த அதிகாரி சஞ்சய் குமார் சிங் தெரிவித்துள்ளார்