அந்தமான் கடல் பகுதியில் உருவாகிய தாழ்வு பகுதியால், ஆந்திராவில் சித்தூர், நெல்லூர், கடப்பா, அனந்தபூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல ஏரிகள் உடைந்து பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
கல்யாணி அணை நிரம்பியதால், மதகுகள் திறக்கப்பட்டு, திருப்பதியிலிருந்து நெல்லூர் மாவட்டம் தடா வரை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. திருமலையில் எங்கு பார்த்தாலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் திருமலையின் நிலைமை மோசமடைந்து உள்ளது. அதற்கான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.