• Mon. Oct 5th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

தமிழக அரசின் நடவடிக்கை வேதனை தருகிறது – ஓபிஸ்

Byமதி

Nov 23, 2021

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைப்பது சாத்தியமில்லை என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருப்பது வேதனை தருகிறது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோல், டீசல் மீதான மத்திய அரசின் வரி இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்ற நிலையில் பெரும்பாலான மாநிலங்கள் வரியை குறைத்திருக்கும் போது தமிழக அரசு மட்டும் இயலாது என கூறுவது நியாயமற்றது என தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் இந்த அறிவிப்பு அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.