தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..,
வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மெல்ல மெல்ல கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால், ஏற்கெனவே டெல்டா, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் தாக்கம் அடுத்த 3 நாள்களுக்கு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.