• Sun. Dec 1st, 2024

குமரியில் விடிய விடிய கனமழை..ஆற்று வெள்ளம் போல் தேங்கிய மழைநீர்..!

Byகுமார்

Sep 27, 2021

அவதிப்படும் பொதுமக்கள்..

கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் நாகர்கோவில் அருகே ஆசாரிபள்ளம் சலோம் நகரில் மழை வெள்ளம் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் அப்பகுதி பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர், மழை நீர் வடிவதற்காக இப்பகுதியில் முகாம் மூலம் தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் சீரமைப்பு பணியை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்த கனமழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் சாலையில் மழை வெள்ளம், ஆற்று வெள்ளம் போல் ஓடி வருகின்றது, இதனிடையே நாகர்கோவில் அருகே ஆசாரிபள்ளம் பகுதியில் அமைந்துள்ள சலோம் நகர் பகுதியில் குடியிருப்புகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது, இதன் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்துள்ளனர், மழைவெள்ளம் வழிந்தோட தேவையான வசதிகள் இல்லாத நிலையில் குழந்தைகளுடன் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இப்பகுதியில் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் மழைநீர் வடிகால் முகாம் நடைபெற்றது. அப்போது மழை நீர் வழிந்தோட தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் தற்போது மழை பெய்துள்ள நிலையில் வெள்ளம் வெளியேறாமல் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

செய்தியாளர் ;சுரேந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *