நடிகை நயன்தாரா தற்போது எங்கு சென்றாலும், விக்னேஷ் சிவனுடன் தான் சென்றுவருகிறார். இது திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடம் இவர்கள் இருவரும் நண்பர்களா இல்லை காதலர்களா என்ற கேள்வியை எழுப்பியது.
சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி பேட்டியில், நயன்தாரா அணிந்திருக்கும் மோதிரத்துக்கான காரணத்தை கேட்டபோது, இது எனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நடந்த நிச்சயதார்த்த மோதிரம் என்று வெளிப்படையாக கூறினார். அன்று ரசிகர்களின் பல நாள் கேள்விகளுக்கு விடையும் கிடைத்தது.
தற்போது நடிகை நயன்தாராவும், வருங்கால கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். கோவில் வளாகத்தில் உள்ள இரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் அவர்களுக்கு பிரசாதங்கள் வழங்கினர்.
மேலும் கோவிலுக்கு வெளியே ஜோடியாக இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அங்கிருந்த ரசிகர்களும் நயன்தாராவுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
நயன்தாராவும் விகனேஷ் சிவனும் திருப்பதிக்கு செல்வது இது முதல் முறை இல்லை. ஏற்கனவே பலமுறை சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.