தமிழகத்தில் தற்போது கத்திரி வெயில் காலம்.ஆனால் அவ்வப்போது பெய்துவரும் கோடை மழை காரணமாக வெயில் தாக்கம் குறைந்து காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக மழை பெய்துவரும் நிலையில் மேலும் 4 நாடகளுக்கு 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம்தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வளிமண்டல மேலடுக்கு சுழற்ச்சி, வெப்பச்சலனத்தால் தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், சேலம், நாமக்கல் ஈரோட்டில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகரில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை, நாளை மறுநாள் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை, நாளை மறுநாள் தென்காசி, விருதுநகர், சேலம் ஈரோட்டில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மே 18ல் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காமே 19-ல் குமரி, நெல்லை, தென்காசியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையில் 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இன்று முதல் மே 17ம் தேதி வரை மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தென்மேற்கு பருவமழைமுன்கூட்டியேதுவங்க இருப்பதாவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 4 நாட்களுக்கு 10 மாவட்டங்களில் கனமழை
