• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

16 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்

Byகாயத்ரி

May 16, 2022

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக சேலம் மற்றும் தேனி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி,சேலம் மற்றும் பெரம்பலூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் வரும் 20ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யக்கூடும் என்றும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் மன்னார் வளைகுடா மற்றும் வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.