• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

கேதார்நாத் கோவில் பகுதியில் கடும் பனிச்சரிவு ..

ByA.Tamilselvan

Oct 1, 2022

பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவில் பகுதியில் கடும்பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவில் அமைந்துள்ளது. பஞ்சகேசார தலங்களில் ஒன்றாக திகழும் இக்கோவில் வடக்கு இமயமலை மலைத்தொடரில் அமைந்துள்ளது. இன்று காலை இந்த கோவில் பகுதியின் பின்புறம் கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டது. இதனால் உயிர்சேதமோ கோவிலுக்கு எந்தவித பாதிப்போ ஏற்படவில்லை என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக கோவிலுக்கு செல்லும் பாதையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.