• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பொதுமக்கள் முன் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி…

Byகாயத்ரி

Oct 1, 2022

பொதுவாக நேர தாமதம் எல்லோரது வாழ்விலும் நடக்கும். அப்படி விழாவுக்கு வர தாமதமானதால் கையெடுத்து கும்பிட்டு பொதுமக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடி நேற்று பொதுமக்கள் விழா ஒன்றில் கலந்து கொள்ள இருந்த நிலையில் அந்த விழாவுக்கு வருவதற்கு தாமதம் ஆகிவிட்டது. இதனையடுத்து அவர் விழா மேடை ஏறிய உடன் அனைவரிடமும் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டுக்கொண்டார். அவரது இந்த செய்கை பொதுமக்களுக்கு பெரும் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.