• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

டிசம்பர் 2023க்குள் 5ஜி சேவை- முகேஷ் அம்பானி..

ByA.Tamilselvan

Oct 1, 2022

டெல்லி பிரகதி மைதானத்தில் நடந்த 6-வது இந்திய கைப்பேசி மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். 5 ஜி சேவை சென்னை உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் முதலில் அறிமுகப்படுத்தப்படுகிறது. பின்னர் அடுத்த சில ஆண்டுகளில் படிப்படியாக விரிவுப்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
உலக பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானி பேசும்போது…. , “தனது தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ டிசம்பர் 2023க்குள் நாடு முழுவதும் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தும். ஜியோ இந்த மாதத்திற்குள் 5G சேவைகளை வழங்குவதற்கு வேகமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், ஜியோ மலிவு விலையில் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தும். டிசம்பர் 2023க்குள் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் 5ஜி சேவை உள்ளடக்கும்” என்று அவர் கூறினார்.