

கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் நிதியில் இருந்து தோவாளை ஊராட்சி ஒன்றியம், கடுக்கரை அரசு உயர்நிலைப் பள்ளியில் வைத்து சுகாதார திருவிழா சிறப்பு மருத்துவ முகமானது 14-8-2023 அன்று நடைபெற்றது. இந்த முகாமில் மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் திரு. விஜய் வசந்த் அவர்கள் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார். துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் டாக்டர் .மீனாட்சி அவர்கள் முன்னிலை வைத்தார். முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். ராஜ்குமார் ,தடிக்கார கோணம் மருத்துவ அலுவலர் டாக்டர் பென்ஸி மெல்பா, மருத்துவர்கள் சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இம்முகாமில் பொது மருத்துவம், குழந்தை மருத்துவம், மகப்பேறு மருத்துவம், எலும்பு சிகிச்சை, கண் சிகிச்சை, தோல் மருத்துவம், காது, மூக்கு ,தொண்டை மருத்துவம், காச நோய் மருத்துவம், தொழுநோய் மருத்துவம் மற்றும் சித்த மருத்துவம் ஆகிய சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். ஊட்டச்சத்து, புகையிலை, தொழுநோய், காசநோய் ஆகிய சிறப்பு கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். இந்த முகாம் ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அருள்தாஸ் மற்றும் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் திரு. அருள்ராஜ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
