• Fri. Jan 17th, 2025

சின்னமுட்டம் குடியிருப்பு மக்கள் தேவாலயம் முற்றத்தில் 6வது நாளாக தொடர் போராட்டம்…

கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள மீனவ கிராமம் சின்னமுட்டம். இந்த மீனவ கிராமத்தில் தான் இயந்திர விசைபடகுகளின் மீன் பிடி துறைமுகம் உள்ளது.

சின்னமுட்டம் ஊரில் 300_க்கும் அதிகமான இயந்திரம் மீன்பிடி படகுகள் உள்ளதால் ஏற்கனவே 5_பெட்ரோல் பங்குகள் செயல் படும் நிலையில், கடற்கரை மற்றும் பொது போக்குவரத்து சாலை இவற்றிற்கு இடையே 24 மீட்டர் இடைவெளியில் புதிதாக பெட்ரோல் பங்க் அமைவதை கண்டித்து, சின்னமுட்டம் தேவாலயம் முற்றத்தில் கடந்த 6_நாட்களாக அந்த பகுதியில் உள்ள குடியிருப்போர் பெட்ரோல் பங்கு இந்த பகுதியில் அமைவதால் பல்வேறு இடையூறுகள் இருப்பதாகவும், மேலும் கடற்கரை மேலாண்மை நிதியையும் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து தொடர் போராட்டத்தின் 6_வது நாளில் வருவாய் துறை அதிகாரிகள் போராட்டக்காரர்கள் மத்தியில் பிரச்சினைக்கு தீர்வு காண நடத்திய பேச்சு வார்த்தையில் முடிவு வராத நிலையில், போராட்ட அமைப்பாளர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தது. சின்னமுட்டம் பகுதியில் ஏற்கனவே 5 பெட்ரோல் பங்குகள் உள்ள நிலையில் மேலும் புதிதாக வரும் பெட்ரோல் பங்க் முறையான அனுமதி பெற்றதாக தெரியவில்லை.

புதிய பெட்ரோல் பங்க் அமைக்கும் நபர் இந்த பகுதி மக்களின் இடையூறுகள் பற்றி நினைவில் கொள்ளாமல். அவரது வியாபாரம் நோக்கம் ஒன்றை மட்டுமே குறியாக கொண்டு செயல் படுகிறார்.

நாங்கள் கடந்த 6_நாட்களாக இன்று (ஆகஸ்ட்14)வரை கோவில் முற்றத்தில் காலை 10மணி முதல் மாலை 5மணி வரை நடத்தி வரும் அறவழி போராட்டத்தை இன்று மாலையோடு நிறுத்தி விட்டு இந்திய சுதந்திர தினத்தை நாளை நாடே கொண்டாட இருக்கும் நிலையில் நாளை நாங்களும் சுதந்திர தின விழா கொண்டாடி மகிழ்ந்து விட்டு நாளை மறுநாள் (ஆகஸ்ட்_16)முதல் உண்ணாவிரத போராட்டத்தை தொடர போவதாக தெரிவித்தார்கள்.