• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

குமரி அனந்தனுக்கு உடல்நல பாதிப்பு

ByA.Tamilselvan

Oct 9, 2022

காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தனுக்கு மூச்சுதிணறல் காரணமாக உடல்நலபாதிப்பு ஏற்பட்டது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மூத்த தலைவருமான குமரி அனந்தன் (வயது 90) சென்னையில் வசித்து வருகிறார். அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். டாக்டர்கள் குழுவினர், குமரி அனந்தனை 24 மணி நேரமும் தொடர்ச்சியாக கண்காணித்து, மருந்து, மாத்திரைகளை கொடுத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.