தல அஜித் தற்போது வலிமை படத்தின் ஷூட்டிங்கை முடித்துக்கொடுத்து விட்டு ஜாலியாக வடஇந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சமீபத்தில் இவர் தாஜ்மஹாலில் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூகவலை தளங்களில் வைரலானது.
தற்போது, இந்தியாவையும் பாகிஸ்தானையும் இணைக்கும் ‘வாகா’ எல்லையில் ஒரு கையில் தேசிய கொடி மறுகையில் ஹெல்மெட் என அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
மேலும் அவர் அங்கு, ராணுவ வீரர்களுடன் உற்சாகமுடன் உரையாடியுள்ளார். ராணுவ வீரர்களுடன் கைக்குலுக்கும் புகைப்படங்களும் தேசியக் கொடியை கையில் ஏந்தியிருக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.