மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், சோழவந்தான் அருகே முள்ளி பள்ளம் கிராமத்தில் உணவு தானியக் கிட்டங்கி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம் எல் ஏ அடிக்கல் நாட்டினார். ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கேபிள் ராஜா வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் முன்னிலை வகித்தார்கள். மாவட்ட மகளிர் அணி செயலாளர் சந்தான லட்சுமி வரவேற்றார். உணவு தானிய கிட்டங்கி 12.5 லட்சம் மதிப்பீட்டில், சிறு பாலத்துடன் கூடிய கழிவுநீர் கால்வாய் சுமார் ஆறு லட்சத்தில், சுற்று சுவர் சுமார் ஐந்து லட்சத்தில் ,சுகாதார வளாகம் சுமார் ஐந்து லட்சத்தில், அங்கன்வாடி மராமத்து சுமார் 1.5 லட்சம் ,துவக்கப்பள்ளி கழிவறை மராமத்து சுமார் 1.5 திட்ட மதிப்பீட்டில், அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் சோழவந்தான் பேரூராட்சி தலைவர் ஜெயராமன் ,துணைத் தலைவர் லதா கண்ணன்,பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், முள்ளிப்பள்ளம்ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகா ஞானசேகரன், மேலக்கால் சுப்பிரமணி, வக்கீல் முருகன், சி பி ஆர் சரவணன், முள்ளிப்பள்ளம் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், வெற்றிச்செல்வன், சோழராஜன், ஊத்துக்குளி ராஜா, ஆப்செட் தெய்வேந்திரன், மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.