• Fri. Mar 29th, 2024

வெள்ளிவிழா நாயகன் மோகன் நடிக்கும் ஹரா

தாபரணா கதே திரைப்படம் மூலம் தேசிய விருது பெற்ற நடிகர் சாருஹாசன், அதன் பின்னர் பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.


சில வருடங்களுக்கு முன் விஜயஸ்ரீ இயக்கத்தில் ‘தாதா 87’ படத்தில் கதையின் முன்னணி பாத்திரமாக நடித்து வெற்றியும் பெற்றார்.

பெண்களின் அனுமதியின்றி அவர்களைத் தொட்டால் சட்டப்படி குற்றம் என்ற கருத்தை இப்படம் வலியுறுத்தியது. இதில் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவென்றால், உலக சினிமா வரலாற்றில் முதல் முறையாக படத்திற்கு முன் போடப்படும் டிஸ்கிளைமரிலும் இந்த கருத்து இடம்பெற்றது.

திரையுலகில் 27 வருடமாக தொடர்ந்து வெற்றிகரமாக மக்கள் தொடர்பாளராக பணியாற்றி வரும் நிகில் முருகனை ஒரு நடிகராக காண்பிக்க முடியும் என்று இயக்குநர் விஜயஸ்ரீ தனது அடுத்த படைப்பான ‘பவுடர்’ படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்.

இவர் மக்கள் தொடர்பாளராக பணியாற்றும் பட விழாக்களில் நிகழ்ச்சி தொடங்கி முடிவதற்குள்ளாககலர்கலராக சட்டைகளை மாற்றும்நிகில் முருகனை ‘பவுடர்’ படத்தில் ஒரே ஒரு காக்கி சட்டை அணிந்து நடிக்க வைத்திருக்கிறேன் என்றார்விஜயஸ்ரீ

நீதிமன்றம் குற்றவாளி என்று அறிவிக்கும் வரை குற்றம் சாட்டப்பட்டவரின் புகைப்படத்தையோ அல்லது மற்ற விவரங்களையோ வெளியிட கூடாது என்பதை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் தான் ‘பவுடர்’.


இந்த படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து, தென்னிந்திய சினிமாவில் வெள்ளி விழா நாயகன் என்று திரையரங்க உரிமையாளர்களால் அழைக்கப்பட்ட நடிகர் மோகனை ‘ஹரா’ என்ற படத்தின் மூலம் அதிரடி நாயகனாக தமிழ் சினிமாவில் களமிறக்குகிறார் இயக்குனர்விஜயஸ்ரீ.


தாதா 87′ திரைப்படம் மற்றும் ‘பவுடர்’ டீசரை பார்த்து விஜயஸ்ரீயிடம் கதை கேட்ட அவர், கதையை கேட்டவுடன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதோடு மட்டுமல்லாமல் தனது இத்தனை வருட காத்திருப்புக்கு பலன் கிடைத்து விட்டது என கூறியதாக கூறுகிறார் விஜயஸ்ரீ

பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே முதலுதவி, குட் டச், பேட் டச் உள்ளிட்டவற்றை குழந்தைகளுக்கு சொல்லித் தருவது போல, ஐபிசி சட்டங்களையும் அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே இந்த படத்தின் முக்கிய கருத்தாகும் என்கிறார் இயக்குனர்
ஹரா’ திரைப்படத்தை கோவை எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *