• Fri. Apr 26th, 2024

பால் அட்டைதாரர்களுக்கு அதிரடி தள்ளுபடி!

திமுகவின் தேர்தல் அறிக்கையில், ஒரு வாக்குறுதியாக ஆவின் பால் விலை குறைக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது! அளிக்கப்பட்டது. அதன்படி முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு, 2021ம் ஆண்டு, கடந்த மே 16ஆம் தேதி ஆவின் பால் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 குறைக்கப்பட்டது. இந்த விலைக்குறைப்புக்கு பின் ஆவின் பால் சராசரியாக நாள் ஒன்றுக்கு 2 லட்சம் லிட்டர் விற்பனை அதிகரித்துள்ளது, என்று தகவல்கள் தெரிவிக்கின்றன!

இந்நிலையில், பால் அட்டை மூலம் பெறும் வாடிக்கையாளர்களுக்கு பால் விலையை மேலும் குறைக்கப்பட்டுள்ளது! அதன்படி,

சமன்படுத்தப்பட்ட பால் (நீலம்) :
அதிகபட்ச விற்பனை விலை லிட்டருக்கு 40 ரூபாய்
பால் அட்டை விற்பனை விலை லிட்டருக்கு 37 ரூபாய்

நிலைப்படுத்தப்பட்ட பால் (பச்சை):
அதிகபட்ச விற்பனை விலை லிட்டருக்கு 44 ரூபாய்
பால் அட்டை விற்பனை விலை லிட்டருக்கு 42 ரூபாய்

நிறை கொழுப்பு பால் (ஆரஞ்சு):
அதிகபட்ச விற்பனை விலை லிட்டருக்கு 48 ரூபாய்
பால் அட்டை விற்பனை விலை லிட்டருக்கு 46 ரூபாய் என உள்ளது.

தற்போது வரை சென்னையில் சுமார் 6 லட்சம் குடும்பங்கள் பிரதி மாதம் பால் அட்டையை சலுகை விலையில் (மாதம் லிட்டர் ஒன்றுக்கு ரூ.60 முதல் ரூ.90 வரை சேமிப்பு) பெற்று பயனடைந்து வருகின்றனர். மேலும் அனைத்து பொது மக்களும் இத்தகைய சலுகையை பெற ஜனவரி மாதம் முழுவதும் ஆவின் வட்டார அலுவலகங்கள், பால் நுகர்வோர்கள் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் ஆவின் அதிநவீன பாலகங்கள் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

பால் அட்டையை பெறுவது எப்படி?

ஆவின் பால் அட்டையை பெற ஏதேனும் ஒரு அடையாள அட்டையை விண்ணப்பத்துடன் சேர்த்து சமர்ப்பிக்கும் பட்சத்தில் உடனடியாக பால் அட்டை வழங்கப்படும். இந்த நிலையில், பாலகங்களில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு மட்டும் மறுநாள் ஆவின் வட்டார அலுவலர்கள் மூலம் பால் அட்டை வழங்கப்படும். மேலும், இணையதளம் வாயிலாகவும் புதிய பால் அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம். www.aavin.tn.gov.in & www.aavinmilk.com. இந்த சலுகை பால் அட்டை பொது மக்களுக்கு மட்டுமே வழங்கப்படும் எந்தவொரு தனியார் நிறுவனங்களுக்கும் வழங்கப்படாது என தமிழக அரசு அரசாணையில் குறிப்பிட்டுள்ளது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *