• Fri. Mar 29th, 2024

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற மூதாட்டி மறைவு…

Byகாயத்ரி

Apr 26, 2022

பல்வேறு நிகழ்வுகளுக்கு பல்வேறு மனிதர்கள் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருப்பர். ஆனால் ஜப்பானை சேர்ந்த மிகவும் வயதான மூதாட்டி இப்புத்தகத்தில் இடம்பெற்றிருந்தார். ஜப்பானில் வாழ்ந்த உலகில் வயதான மூதாட்டி காலமாகியுள்ளார் என அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் உள்ள புகுவோகாவை சேர்ந்தவர் கேன் தனகா,119 உலகின் மிக வயதான நபர் என, 2019ல் இவரது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. இவர் சென்ற 19ஆம் தேதி காலமாகி உள்ளார். எனினும் இந்தத் தகவல்கள் அப்போது வெளியாகவில்லை. இந்த நிலையில் மூதாட்டியின் மரணத்தை அதிகாரப்பூர்வமாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. மறைந்த மூதாட்டி தனகா, 1903ம் ஆண்டு பிறந்தவர். கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில், கேன் தனகாவின் 116வது வயதில் உலகின் மிக வயதானவர் என, பெயர் பதிவானது. 2020செப்டம்பரில் இவரது வயது 117ஆண்டு மற்றும் 261 நாட்களை எட்டியது.இதையடுத்து, ஜப்பானில் அதிக நாட்கள் வாழ்ந்தவர் என அந்நாட்டு ஆவணங்கள் இவரது பெயரை பதிவு செய்தன.

இவரது மரணத்தை அடுத்து, பிரான்ஸ் நாட்டில் வசிக்கும், 118 வயதைக் கடந்த லுாசில் ராண்டன் என்ற மூதாட்டி, உலகின் மிக வயதான நபராக மாறி உள்ளார். உலகிலேயே அதிக வயதான பெண்மணி என்ற பெருமையுடன் வாழ்ந்து வந்த தனகா காலமானதையடுத்து, பிரெஞ்சுப் பெண்மணியான லூசில் ராண்டன் என்பவர் தற்போது உலகின்மிக வயதான நபராக உள்ளார். அவருக்கு வயது 118.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *