• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஜனவரி 12ல் குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு..!

Byவிஷா

Dec 17, 2023

குரூப்-2 தேர்வு முடிவுகள் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என டிஎன்பிஎஸ்ஸி அறிவித்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம், 5,446 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. இதில் 57,641 பேர் தேர்ச்சி அடைந்திருந்தனர். தொடர்ந்து, இவர்களில் 55,071 பேர் கடந்த பிப். 25ஆம் தேதி நடந்த குரூப்-2 முதன்மைத் தேர்வுகளில் பங்கேற்றனர்.
இந்நிலையில், இத்தேர்வுக்கான முடிவு ஜன. 12ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே சமயத்தில் பல தேர்வுகள் நடத்தவேண்டிய சூழ்நிலையாலும் மற்றும் சமீபத்திய புயல் வெள்ளம் காரணமாக விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு தற்போது கூடுதல் காலம் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.