• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பேனாக்கள்..,

எண்ணற்ற பேனாக்கள் இங்குதான் எழுதுகின்றன

தன் மூ(ளை)டியை திறந்து கற்பனைகளை கொட்டுகிறது..!

அறிவற்ற பேனாக்கள் சில!
அசிங்கத்தை எழுதுகிறது!ஆர்வத்தில் சிலதுகள் அர்த்தமற்று எழுதுகிறது!

தாண்டிச் செல்வதன்றி தகராறு நமக்கெதற்கு!

அழகாய் எழுதுகிறதென்று வளர்வதற்கு வாழ்த்துகள் சொன்னபோதும்..!

சில கர்வப்பேனாக்கள் அதை கண்டுகொள்வதிலலை..!
தானும் அழகு தன் எழுத்தும் அழகென்று இறுமாப்பு கொண்ட இரும்பு பேனாக்களோ..!

அழகற்ற பேனாக்கள் பல அழகாய் எழுவதும் அன்புக்கு அன்பை அழகாய் பரிமாறுவதும் எங்கோ சில இடத்தில் இருக்கவே செய்கிறது ! வாழட்டும் வளமாக ! நலமாக!

சில படிக்கத்தெரிந்த பேனாக்களுக்கு எழுதத் தெரிவதில்லை..!

எழுதத் தெரிந்த பல பேனாக்களுக்கு இங்கிதம் தெரிவதில்லை..!

இதனால் இழப்புமில்லை லாபமுமில்லை..!
விரல் நகர்த்தி கடந்து விட்டால் மன அழுத்தம் ஏதுமில்லை..!

நல்லவைக்கு கரம் கொடு!
கெட்டவையெனில் கடந்துவிடு..!

மன அழுத்தம் என்றும் மற்றவரால் வருவதே!

தீதும் நன்றும் பிறர் தராமல் வருவதில்லை..!

பேனாக்களை சில காகிதங்கள் கூட மறு தளிப்பதுண்டு ..!

தாங்குவதற்கு விரல்கள் கூட கூச்சப்படுவதுண்டு ..!

கரையான் அளிக்கும் எழுத்துக்கள் சில காலத்தை வெல்வதாய் கர்ப்பம் கொள்கிறது ..!

பொதுவான கருத்து ஒப்பிடுவதற்கு ஒன்றுமே இல்லை..!

கவிஞர் பா.தமிழ்தங்கவேல்