
பேரழகனே..,
முரடன் உன் கைகளின்
வெப்பச்சூட்டில் உருகி….
நான் தொலைந்து தான் போகிறேன் …
இளைப்பாறுகிறேன் நான் உன்
பேரன்பின் ஒளியில்…
வலசை பறவையென..!
மாபெரும் நேசத்திற்குள் மொத்த
அபத்தங்களையும் புதைத்து வைத்து
பரிணமிக்கிறேன்
பரிசுத்தமாய் உன் பாதசுவடு தேடி…
வாழ்க்கையின் பெருஞ்சாபம்
நீயில்லாத கணங்களில்
முற்றுப்பெறாத உன் நியாபகங்கள்…
தேன் நிறைத்து இதழொற்றி
நீ தந்திடும் ஒற்றை முத்தத்தில்
தொலைந்து தான் போகிறேன்..!
தவழும்கரங்களில்
பற்றிக்கொள்ளும் தருணங்களில்
உயிராய்
நேசிக்கிறாய்
கனவினூடே…
யாசிக்கிறேன் சுவாசிக்கிறேன்
அந்திப்பொழுதின்
துவக்கத்தில் ..!
காத்திருக்கிறேன்
நடுஇரவுக்காய்
நேசநிலவாய்
கனவுகளின் சங்கமங்களில்…

கவிஞர் மேகலைமணியன்
