• Sat. Jun 20th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

தனுஷ் இல்லாத கிரே மேன் கிளிம்ப்ஸ்!

ஹாலிவுட்டில் தனுஷ் நடித்துள்ள படம் தி கிரே மேன். இந்தப் படம் நெட்பிளிக்சில் வெளியாக உள்ளது. அவெஞ்சர்ஸ், கேப்டன் அமெரிக்கா உள்ளிட்ட படங்களை இயக்கிய ரூசோ சகோதரர்கள் இந்தப் படத்தை இயக்கியுள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சிகளை தற்போது ரூசோ சகோதரர்கள் வெளியிட்டுள்ளனர்.

தி கிரே மேன்!
வரும் ஜூலை மாதத்தில் நெட்பிளிக்சில் இந்தப் படம் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம், கேப்டன் அமெரிக்கா வின்டர் சோல்ஜர், சிவில் வார் போன்ற படங்களை இயக்கிய ரூசோ சகோதரர்கள் இந்தப் படத்தை இயக்கியுள்ளனர்.

ரிலீசுக்கு தயார்
இந்தப் படத்தில் தனுஷ், கேப்டன் அமெரிக்கா படத்தில் நடித்திருந்த கிறிஸ் ஈவான்ஸ் மற்றும் லா லா லேண்ட், பர்ஸ்ட் மேன் ஆகிய படங்களின் கதாநாயகன் ரயன் காஸ்லிங் போன்றவர்கள் நடித்துள்ளனர். இதையடுத்து தற்போது இந்தப் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

கிளிம்ப்ஸ் காட்சிகள் வெளியீடு
இதையொட்டி படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சிகளை இன்றைய தினம் ரூசோ சகோதரர்கள் ஜோ மற்றும் ஆண்டனியால் வெளியிடப்பட்டது! இதில் மிரட்டலான ட்ரெயின் காட்சிகள் காணப்படுகின்றன. மேலும் கிறிஸ் ஈவான்ஸ் படத்தின் வில்லனாக மிரட்டியுள்ளார். மேலும் கிறிஸ் ஈவான்ஸ் படத்தில் தன்னுடைய கேரக்டர் குறித்த பழைய படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இதையொட்டி ரசிகர்கள் படம்குறித்த கேள்விகளை தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.

ரசிகர்கள் ஏமாற்றம்
தற்போது ரூசோ சகோதரர்கள் வெளியிட்டுள்ள படத்தின் டீசரில் தனுஷ் இடம்பெறாதது இந்திய ரசிகர்களை மிகவும் ஏமாற்றம் கொள்ள செய்துள்ளது. இதையடுத்து தனுஷின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட வலியுறுத்தி ரசிகர்கள் ட்விட்டரை அலறவிட்டு வருகின்றனர்.

கேங்ஸ்டராக தனுஷ்?
ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்தப் படம் மார்க் கிரேனே கடந்த 2009ல் எழுதிய நாவலை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. இதில் கேங்ஸ்டராக தனுஷ் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது!