நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த அரசு தொடக்கப்பள்ளி அலுவலக முகாம் குந்தா பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு 27/4/2023 ஆண்டு வியாழக்கிழமை பட்டமளிப்பு விழா நடைபெற்றது .
பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பெற்றோர்கள் ஆசிரிய பெருமக்கள் என திரளாக கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியர் ஜெயந்தி வரவேற்று பேசினார் மாணவர்களுக்கு வாழ்த்துரையும் அறிவுரையும் வழங்கி படிப்பு ஒழுக்கம் போன்றவற்றை மற்ற பள்ளியில் சென்று பயின்றாலும் கடைப்பிடிக்க வேண்டும்.
பெற்றோர் ஆசிரியர்களிடம் மரியாதையாக நடந்து கொள்வது என தலைமையாசிரியர் அறிவுரை வழங்கினார். மேலும் உதவி ஆசிரியை சபீதா ஆசிரியர் நாகராஜ் மற்ற ஆசிரியர்களும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துரை வழங்கினார்கள் .பட்டமளிப்பு விழாவை ஒட்டி பெற்றோர்கள் பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியில் ஆசிரியர் அமுதா மற்றும் கவிதா வாழ்த்துரை வழங்கி நன்றியுரை வழங்கப்பட்டனர்