• Sat. Aug 15th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

பி.எஸ்.ஜி.தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விருதுகள் வழங்கும் விழா..,

BySeenu

Jun 29, 2026

கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் பட்டமளிப்பு விருது வழங்கும் விழா கல்லூரியின் நூற்றாண்டு நினைவு அரங்கில் நடைபெற்றது.

விழாவில் முதல் தரவரிசை பெற்ற ஒன்பது மாணவர்கள் உட்பட பல்வேறு பொறியியல் துறை சார்ந்த 397 பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. மேலும், கல்வி, ஆராய்ச்சி மற்றும் சமூகப் பணிகளில் சிறந்து விளங்கிய பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.

பி.எஸ்.ஜி.அண்ட் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற,விழாவில் பயன்பாட்டு கணிதம் மற்றும் கணக்கீட்டு அறிவியல் துறையின் தலைவர் முனைவர் ஷைனா ஷீன் வரவேற்புரையாற்றினார்..

தலைமை விருந்தினராக மைக்ரோசாப்ட் ஆராய்ச்சி இந்தியா (MSR India) நிர்வாக இயக்குனர் டாக்டர் வெங்கட் பத்மநாபன் கலந்து கொண்டு பட்டங்கள் மற்றும் விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், தொழில்நுட்ப மாற்றங்கள் என்பது மனித வாழ்வின் அடுத்த கட்ட வளர்ச்சியே என்றும், தற்போதைய செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பமும் அதே வளர்ச்சியின் ஒரு பகுதிதான் என்றும் கூறினார். இளம் தலைமுறை மாணவர்கள் தொழில்நுட்ப மாற்றங்களைப் புரிந்துகொண்டு புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புதுமையான தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

விழாவின் ஒரு பகுதியாக,பல்வேறு துறைகளில் சிறந்து செயல்பட்ட மாணவர்களுக்கு பன்முகத்தாள்வார் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது..

நிகழ்ச்சியில் கல்லூரி பல்வேறு துறை தலைவர்கள்,பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.