• Wed. Sep 30th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கோவை மாநகர் திமுக சார்பில் காவல்துறை தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம்..,

BySeenu

Jun 29, 2026

தவெக அமைச்சர் சரத்குமார் பொது இடத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதை கண்டித்தும், அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் துரை செந்தமிழ் செல்வன் தலைமையில், கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காவல்துறையின் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் தவெக அரசை கண்டித்து கண்டன கோசங்கள் எழுப்பப்பட்டது. தொடர்ந்து, காவல்துறையின் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் துரை செந்தமிழ் செல்வன், மேயர் ரங்கநாயகி, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மாவட்ட துணைச்செயலாளர்கள் கோட்டை அப்பாஸ், கல்பனா, வழக்கறிஞர்கள் ராஜேந்திரன், கணேஷ்குமார், அணி அமைப்பாளர்கள் அன்புசெழியன், தனபால், பாபு உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.