• Fri. Jul 10th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

கோவையில் பள்ளி மாணவி பலாத்காரம் – வாலிபர் கைது !!!

BySeenu

Jun 30, 2026

கோவை, சூலூர் அருகே உள்ள கிராமத்தில் பீகாரைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். பெற்றோர் வேலைக்குச் சென்ற நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக அருகில் உள்ள கடைக்குச் சென்று விட்டு வருவதாக கூறிச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை.

பெற்றோர் அக்கம், பக்கம் தேடி பார்த்து விட்டு பள்ளி மாணவியை காணவில்லை என சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சூலூர் காவல் துறையினர் பள்ளி மாணவியை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மாயமான அந்த சிறுமியுடன் பீகாரை சேர்ந்த ஒரு வாலிபர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். விசாரணையில் திருமண ஆசை வார்த்தைகளை கூறி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவி கூறினார்.

இதை அடுத்து பீகாரைச் சேர்ந்த ராம் பிரகாஷ் மகன் புல் பாபு குமாரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.