சித்திரை முதல் நாளுக்காக தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்தார் ஆளுநர் ரவி. நீட் உள்ளிட்ட தீர்மானங்களை கிடப்பில் போட்டிருக்கும் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்த விருந்தை புறக்கணித்தன. பாஜக அதிமுக, பாமக கட்சிகள் மட்டுமே கலந்துகொண்டன. ஆளுநரின் தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணித்ததும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “ஆளுநருக்கு டீ செலவு மிச்சம். மக்கள் வரிப்பணம் கொஞ்சம் மிச்சமாகிறது’’ என்றார்.
“பெட்ரோல், டீசல் விற்கும் விலையில் ஆளுநர் மாளிகைக்குச் சென்றுவர ஆகும் டீசல் செலவு மிச்சம் என எங்களாலும் சொல்ல முடியும். தமிழ் நாட்டின் உரிமை பிரச்சனைக்கான புறக்கணிப்பைத் தேநீர் செலவு மிச்சம் என மலினப்படுத்தக்கூடாது” என்று பதிலடி கொடுத்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநாவஸ்.
நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “இன்னொரு அம்சத்தையும் குறிப்பிட மறந்து விடாதீர்கள், ஆளூர் ஷாநாவஸ் சகோதரரே. இந்த தேநீர் விருந்து யாருடைய தனிப்பட்ட நிதியிலிருந்தும் வழங்கப்படுவதில்லை. தமிழ் மக்களின் பணம் செலவிடப்படுகிறது. சொன்னது போல் சேமிப்பு இருந்ததா இல்லையா என்பதை அறிய, பில் (கோப்பு) வரும் வரை காத்திருப்போம்” எனத் தனது ட்விட்டரில் பதிவிட்டார்.
ஆளுநர் மாளிகைக்கு எவ்வளவுதான் செலவாகிறது? அரசு வட்டாரத்தில் தகவலைத் திரட்டினேன். கவர்னர் செயலகம், கவர்னர் இல்லம் என ராஜ்பவனுக்காக இரண்டு வகையான செலவுகளை அரசு செய்கிறது. அதன்படி 2021 – 2022 ஆண்டுக்கான செலவு விவரங்கள் கிடைத்தன.
முதலில் கவர்னரின் செயலகம் பற்றிய செலவுகளைப் முதலில் பார்ப்போம். கவர்னரின் செயலகத்தில் கவர்னரின் அலுவலக ரீதியிலான பணிகளைச் செய்வதற்காக பணியாளர்கள் இருப்பார்கள். அவர்களுக்காகவும் அலுவலகத்தின் பணிகளுக்காகவும் பணம் செலவிடப்படுகிறது. சம்பளத்திற்காக மட்டுமே 2021 – 2022-ம் ஆண்டுக்கு 1,60,79,000 கோடி ரூபாயைச் செலவிட்டிருக்கிறார்கள். என்னென்ன செலவுகள் எல்லாம் செய்யப்பட்டிருக்கின்றன?
அடிப்படை சம்பளம் -1,44,43,000
மருத்துவ படி – 36,000
மருத்துவ செலவுகள் – 50,000
படிகள் – 88,000
வீட்டு வாடகைப் படி – 12,23,000
பயண சலுகை – 30,000
நகர ஈட்டுப்படி – 2,09,000
அகவிலைப்படி – 32,50,000
சுற்று பயணப் படிகள் – 8,00,000
தொலைப்பேசி கட்டணம் – 5,00,000
சில்லறை செலவுகள் – 5,10,000
மின் கட்டணம் – 3,91,000
தபால் செலவு – 90,000
வண்டிகளின் பராமரிப்பு – 1,53,000
பொருள்கள் வாங்கியது – 1,00,000
அரசு வழக்கறிஞர் கட்டணம் – 1,00,000
ஒப்பந்த ஊதியம் – 57,09,000
பெட்ரோல் ஃ எரிபொருள் – 6,14,000
பராமரிப்பு – 42,000
ஸ்டேஷனரி – 1,29,000
மொத்தம் – 2,84,97,000
கவர்னரின் செயலகத்திற்கு மட்டுமே ஒரு ஆண்டிற்கு 2 கோடியே 84 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அப்படியென்றால் கவர்னரின் இல்லத்திற்கு என்னென்ன செலவுகள் செய்யப்படுகின்றன? அதன் விவரம் விரைவில்..
- சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிபங்குனி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிவழங்கி […]
- தமிழகத்தில் பிரிக்கப்படும் மாவட்டங்களின் பட்டியல்தமிழகத்தில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்தமிழகத்தில் மேலும் 8 […]
- இன்று தமிழ்நாடு முழுவதும் சுங்க கட்டணம் உயர்வு..!ஏப்ரல் முதல் நாளான இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள […]
- உதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் அலங்கார உபாய திருவீதி உலாஉதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் பனிரெண்டாம் நாள் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது.உதகை தாசபளஞ்சிக […]
- அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை!!இன்று வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக விலை குறைந்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா […]
- மதுரை காமராஜர் பல்கலை . பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைதுமதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் மாணவிகளிடம் தரக்குறைவாக பேசிய வரலாற்றுத் துறை பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைதுமதுரை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 150: நகை நன்கு உடையன் பாண நும் பெருமகன்மிளை வலி சிதையக் களிறு […]
- ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி பாஜக நடிகர் ஆர்.கே.சுரேஷ் வெளிநாடு தப்பி ஓட்டம்ஆருத்ரா கோல்டு நிறுவனம் ரூ.2438 கோடி மோசடி செய்த வழக்கில் திடீர் திருப்பமாக நடிகரும், பாஜக […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் நிபந்தனையற்ற அன்பு! ஏழை சிறுவன், பசியால் ஒரு வீட்டின் கதவைத் தட்டினான்.கதவைத் திறந்த இளம்பெண், […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று முட்டாள் தினம் -ஒருவரை அறிவாளி /முட்டாள் என தீர்மானிப்பது யார் ?உலகம் முழுதும் “April Fools Days” என்று இன்றளவும் மக்கள் ஒருவரையொருவர் முட்டாளாக்கி கொண்டு மகிழ்ச்சியோடு […]
- குறள் 415இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றேஒழுக்க முடையார்வாய்ச் சொல்.பொருள் (மு.வ):கல்லாதவன் ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் […]
- சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கைபணிகள் நிறைவு பெற்ற நிலையில் மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க சமூக […]
- திருப்பரங்குன்றம் கோயிலில் அன்ன வாகனத்தில் முருகன், தெய்வானை எழுந்தருளி அருள்பாலித்தார்..!திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி மூன்றாவது நாள் திருவிழாவில் அன்ன வாகனத்தில் முருகன் தெய்வானை […]
- எல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள்-நடிகர் சூரி பேட்டிஎல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள், ரோகினி திரையரங்க சம்பவம் வருத்தமளிக்கிறது, எந்த சூழலில் […]