நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக் கோரி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை குடியரசு தலைருக்கு அனுப்பி வைக்க தமிழ்நாடு ஆளுநர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நீட்தேர்வு தமிழகத்தில் பல மாணவர்களின் மரணத்திற்கு காரணமாக அமைந்துவிட்டது.சிறுவயதிலிருந்தே மருத்துவ கனவோடு வாழும் ,மாணவர்கள் அவர்களின் பொற்றோர்களையும் அதி்ச்சியையும் ,வேதனையையும் உருவாக்கியது.நீட் தேர்விலிருந்து தப்பி வெளிநாடுகளில் மருத்தவம் படிக்கும் மாணவர்கள் ஏராளம்.அதிலும் உக்ரைன் போருக்கு பின்னால் அங்கு மருத்தவம் படித்த மாணவர்களின் நிலை என்ன என்பதேகேள்விக்குறியதாக உள்ளது.
தற்போது தமிழகத்தின் ஆளும் கட்சியான தி.மு.க நீட் தேர்வுக்கு விலக்கு பெற்றுத் தருவோம் என்று தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்குகளை ஈர்த்தது. நீதிபதி ராஜன் குழுவை நியமித்து , அந்தக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் மாநில சட்டப்பேரவையில் சட்டமியற்றி அதை ஆளுநரின் ஒப்புதலுக்கு 2021ஆம் ஆண்டு செப்டம்பரில் திமுக அரசு அனுப்பி வைத்தது.
ஆனால், அந்த மசோதாவை ஆளுநர் ஆர்.என். ரவி 142 நாட்களுக்குப் பிறகு சில ஆட்சேபங்களைக் குறிப்பிட்டு சபாநாயகருக்கே திருப்பி அனுப்பினார். இதைத்தொடர்ந்து மாநில சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது. மீண்டும் நீட் விலக்கு மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டது. கடந்த மார்ச் 13ஆம் தேதிமசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. பிறகு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்குமாறும் மசோதா மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மசோதாக்கள் சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டால் அதை உடனடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அப்போது தெரிவித்தனர்.
இந்நிலையில் தமிழ் புத்தாண்டு மற்றும் பாரதியார் உருவச்சிலை திறப்பு விழாவையொட்டி ஆளுநர் ராஜ்பவன் மாளிகையில் ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்து நிகழ்ச்சியை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன. நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் தாமதப்படுத்தும் போக்குக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தேநீர் விருந்து நிகழ்ச்சியை தவிர்ப்பதாக தமிழக அரசு சார்பிலும் அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் மசோதா தொடர்பான தமது பரிசீலனை மற்றும் பணிகள் முடிந்து விட்டதால் அதை குடியரசு தலைவருக்கு அனுப்ப உள்ளதாக மாநில ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க ஆளுநர் முடிவு செய்துள்ள தகவல், சமீபகாலமாக மாநில அரசு மற்றும் ஆளுநருக்கு இடையிலான மறைமுக போர் முடிவுக்குவரும் என எதிர்பார்க்கலாம்.