
ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என் ரவியிடம் ரஜினி அரசியல் பேசியதற்கு மார்க்சிஸ்ட் செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்துளார்.
இதுகுறித்து சிபிஎம் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் ” ஆளுநர் மாளிகை அரசியல் பேச்சுக்கான அலுவலகமல்ல.. அப்படி இருக்கையில் , ஊடகங்களோடு பகிர்ந்து கொள்ள முடியாத அளவுக்கான அரசியலை ரஜினியுடன் பேச வேண்டிய அவசியம் ஆளுநருக்கு எதனால் வந்தது. இது தமிழ்நாட்டு மக்களுக்கு விரோதமானதுஎன்று விமர்சித்துள்ளார்.
