• Sun. Oct 6th, 2024

டிகிரி தேர்ச்சிபெற்றவர்களுக்கு அரசு வேலை!

தென்னிந்திய பன்-மாநில விவசாய கூட்டுறவு சங்கம் லிமிடெட் எனப்படும் South India Multi-State agriculture co-operative Society Ltd., (SIMCO) காலியாக உள்ள கீழ்க்கண்ட பல்வேறு காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பதவியின் பெயர் :
அலுவலக உதவியாளர் – 10
விற்பனையாளர் – 22
மேற்பார்வையாளர்- 8
கணக்காளர் – 4
கிளை மேலாளர் – 4 என மொத்தம் 48 காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி :

அலுவலக உதவியாளர் – 10வது தேர்ச்சி/ ஐடிஐ/ 12வது தேர்ச்சி
விற்பனையாளர் – 12வது தேர்ச்சி/ ஐடிஐ/ எதாவது ஒரு துறையில் டிப்ளமோ தேர்ச்சி
மேற்பார்வையாளர்- டிகிரி தேர்ச்சி
கணக்காளர் – UG/ PG (B.Com/ M.Com)
கிளை மேலாளர் – எதாவது ஒரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

01.01.2022 அன்றுள்ள படி

General / UR – 21- 30
SC/ ST – 21-35
OBC – 21-33

சம்பளம் :

அலுவலக உதவியாளர் :ரூ.5200 – 20200
விற்பனையாளர் : ரூ.6200 – 26200
மேற்பார்வையாளர்கள் : ரூ.6200 – 28200
கணக்காளர் : ரூ. 7200 – 30200
கிளை மேலாளர் : ரூ.8200 – 32200

தேர்வு செய்யும் முறை :

எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, தனிப்பட்ட நேர்காணல்

பணியிடம் :

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தார்கள் திருவண்ணாமலை, அரியலூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் பணியமர்த்தப்பட உள்ளனர்.

விண்ணப்பக் கட்டணம் :

Gen / UR – Rs.500/-
SC / ST – Rs.250/-

விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

SOUTH INDIA MULTI-STATE AGRICULTURE CO-OPERATIVE SOCIETY LTD.,
HEAD OFFICE, TOWN HALL CAMPUS,
NEAR OLD BUS STAND,
VELLORE – 632004.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.02.2022

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *