• Fri. Mar 29th, 2024

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கங்காள நாதர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்

Byகாயத்ரி

Feb 7, 2022

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் முருகரும், தெய்வானையும் கங்காளநாதர் புறப்பாட்டில் வலம் வந்து அருள்பாலித்தனர்.பக்தர்கள் இருகரம் கூப்பி வழிபாடு செய்து முருகனின் அரோகரா கோஷத்தை முழக்கமிட்டனர்.

ஆறுபடைகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கொரோனா கால விதிமுறைகளின் படி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இக்கோவிலில் மாதம் தோறும் திருவிழா என்றால், தைத் தெப்ப திருவிழாவும், பங்குனி உத்தரமும், வைகாசி விசாக பால் குடம் பக்தர்களுக்கு கொண்டாட்டமாகவே இருக்கும். அப்படிப்பட்ட பெரும் கொண்டாட்டத்தில் தைத் தெப்ப திருவிழாவாக நிகழ்ந்து வருகிறது. இது ஆகாம விதிமுறைகளின் படி தினமும் காலையில் யாக சாலை பூஜைகள் முதலில் தொடங்கி உச்சவராக இருக்கக்கூடிய முருகனுக்கும் தெய்வானைக்கும் அபிஷேகம் நடந்து, சங்க நாதங்களும், மேல தாளங்களும் முழங்க, தீப தூப ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. பின்பு சுவாமியும் அம்பாள் தெய்வானையும் திருவாச்சி மண்டபத்தை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.இன்று கங்காள நாதர் கை சப்பரத்தில் திருவாச்சி மண்டபத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து பின்னர் திருவாச்சி மண்டபத்திற்கு ஒன்றன் பின் ஒன்றாக வந்தனர். அரோகரா என்று முருக பக்தர்கள் கோஷத்தில் கோவில் தெய்வீகமாய் காணப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *